சினிமா

சுறா பட காமெடியை ரீகிரியேட் செய்த வைகைப்புயல் வடிவேலு : சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!

நடிகர் வடிவேலுவின் ரீகிரியேட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுறா பட காமெடியை ரீகிரியேட் செய்த வைகைப்புயல் வடிவேலு : சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1988ம் ஆண்டு வெளியான என் 'தங்கை கல்யாணி' படத்தின் மூலம் தனது முகத்தை மக்களுக்கு முதல்முறையாக காட்டினார் வடிவேலு. இதில் இருந்து இதுவரை மக்களின் கவலையை போக்கு முகமாக இருந்து வருகிறார் வடிவேலு. தனது நகைச்சுவை நடிப்பால் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை மகிழ்வித்து வருகிறார். இவர் பேசிய வசனங்கள் இப்போது 2k கிட்ஸ்-களின் மீம்ஸ்க்கு பயன்பட்டு வருகிறது.

சுறா பட காமெடியை ரீகிரியேட் செய்த வைகைப்புயல் வடிவேலு : சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!

வருடத்திற்கு பத்து படங்களுக்கு மேல் நடித்து வந்த வடிவேலு தற்போது ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் டிநத்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மைசூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேறு சுறா படத்தின் கச்சேரி சீனை ரீக்கிரியேட் செய்துள்ளார். இதை வீடியோ எடுத்த நடிகை ராதிகா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும் என்ற கேள்வியும் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories