சினிமா

’ரத்தமும், போர்க்களமும்’.. வெளியான 'பொன்னியின் செல்வன்' டீசர்: படம் எப்போது வெளியாகிறது?

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் டீசர் வெளியானது.

’ரத்தமும், போர்க்களமும்’.. வெளியான  'பொன்னியின் செல்வன்' டீசர்: படம் எப்போது வெளியாகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் படமாக எடுத்துள்ளார்.இந்த படத்திற்காக அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான ஆர்வம் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, 'பொன்னியின் செல்வன்' வாசகர்களிடமும் அதிகரித்துள்ளது.

இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் செப்டம்பரில் படம் வெளியாகும் எனவும் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’ரத்தமும், போர்க்களமும்’.. வெளியான  'பொன்னியின் செல்வன்' டீசர்: படம் எப்போது வெளியாகிறது?

இந்த விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாத்ணடமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டுதான் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களை ஏற்றி நடிக்கிறார்கள் என்று படக்குழு வெளியிட்டது. அதன்படி ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச்சோழனாக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கின்றனர்.

அதேபோல் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும், கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளனர்.

மேலும் சில நாட்களாகவே இந்த கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் வெளியானது. இந்நிலையில் இன்று 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories