சினிமா

கோலிவுட் TO பாலிவுட்.. மாஸ் காட்டும் 'கைதி' பட வில்லன் அர்ஜூன் தாஸ்!

‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ், விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்புடத்தியுள்ளது.

கோலிவுட் TO பாலிவுட்.. மாஸ் காட்டும் 'கைதி' பட வில்லன் அர்ஜூன் தாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகர் தான் அர்ஜூன் தாஸ். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் 'கைதி' படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

இதையடுத்து கைதியை தொடர்ந்து 'அந்தகாரம்' என்ற திகில் படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் அண்மையில் வெளியான 'விக்ரம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

கோலிவுட் TO பாலிவுட்.. மாஸ் காட்டும் 'கைதி' பட வில்லன் அர்ஜூன் தாஸ்!

இந்த நிலையில் தற்போது இவர் முதன்முதலில் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரையுலகில் ஹிட் கொடுத்த திரைப்படமான 'அங்காமலே டைரிஸ்' திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஹிந்தியில் அறிமுகவுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angamaly Diaries, Malayala Film
Angamaly Diaries, Malayala Film
Angamaly Diaries, Malayala Film

அதுமட்டுமின்றி சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் அர்ஜூன் தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூரவ அறிவிப்பாக இன்னும் வெளிவரவில்லை. தற்போது இவர் வசந்த பாலனின் ‘அநீதி’, பிரபு சாலமனின் ‘கும்கி 2’, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories