சினிமா

ஒரே படம் .. சல்மான் கான் நேரில் வாழ்த்து.. தமிழ் சினிமா வரலாற்றில் சம்பவம் செய்த விக்ரம்.. லோகேஷ் ‘மாஸ்’!

விக்ரம் படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிதது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ஒரே படம் .. சல்மான் கான் நேரில் வாழ்த்து.. தமிழ் சினிமா வரலாற்றில் சம்பவம் செய்த விக்ரம்.. லோகேஷ் ‘மாஸ்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் திரையரங்குகளில் வசூல் வேட்டையில் மூழ்கியுள்ளது நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’. இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.

விக்ரம் படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்ற நிலையில், 'விக்ரம்' படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது.

இந்நிலையில் 'விக்ரம்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் கமலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாஸ் படமாக 'விக்ரம்' அமைத்துள்ளது.

தமிழத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் நிரம்புகின்றன. 'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியது. பின்னர், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிதது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், உலக அளவில் படம் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.165 கோடி வசூலாகியுள்ளது. பார்வையாளர்களின் கூட்டம் குறையாததால் படம் விரைவில் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணையும் என்று திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் வெற்றியை இந்திய முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் இருவரும் ஹைதராபாத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜும் உடன் இருந்தார்.

banner

Related Stories

Related Stories