சினிமா

நெல்சனுடன் ரஜினி ஆலோசனை..? - சூர்யா படத்திற்காக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்! #Cinema_Updates

‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது.

நெல்சனுடன் ரஜினி ஆலோசனை..? - சூர்யா படத்திற்காக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்! #Cinema_Updates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மீண்டும் தள்ளிப் போகும் ‘மாமனிதன்’

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது. அதன்படி இப்படம் மே மாதம் 10ஆம் தேதியிலிருந்து, ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா படம் குறித்து பதிவிட்ட கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ்

நடிகர் அருண்விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் நடிப்பில் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் படம் ‘ஓ மை டாக்’. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் தந்தையான விஜயகுமாரும் நடித்திருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் குறித்து ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஜாண்டி ரோட்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘செல்லப்பிராணி விரும்பியாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா, மிக்க நன்றி, உங்களின் பெரிய ரசிகன் நான் என்று தெரிவித்துள்ளார்.

நெல்சனுடன் ஆலோசனையில் ரஜினி?

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக, ரஜினி நடிக்கும் 169வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், `பீஸ்ட்' படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், படம் பற்றிய சில நெகட்டிவ் கருத்துகள் பலராலும் பகிரப்பட்டது.

ஆனால், ரஜினியை நெல்சன் இயக்குவதில் எந்த மாற்றமுமில்லை என்றே சொல்லப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, படத்தின் கதை விவாதம் குறித்து இயக்குனர் நெல்சனுடன் நடிகர் ரஜினி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் வெற்றி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜீவி'. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகிவருகிறது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜீவி 2 படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை மாநாடு படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யஷ்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்தியளவில் மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்து வருகிறது கே.ஜி.எஃப். சேப்டர் 2. இந்நிலையில், ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் யஷ். ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசோக்செல்வன் - பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘ஹாஸ்டல்’ பட டிரெய்லர்

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெற்றிபெற்ற 'அடி கேப்யாரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஹாஸ்டல் படம் உருவாகியுள்ளது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

பாபோ சசில் இந்தப் படத்துக்கு இசையமைக்க, அப்சர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்பொழுது படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துவருகிறது.

கவின் நடிக்கும் ‘டாடா’

கவின் நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஊர் குருவி படத்தில் கவின் நாயகனாக நடித்துவருகிறார். இந்நிலையில், கவின் நடிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ‘டாடா’. இந்தப் படத்தில் பீஸ்ட் பட நாயகி அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories