சினிமா

அந்த 25 நொடிகள்... 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ஸ்டீவ்-தேவா காம்போ!

சிங் இன் தி ரெயின் பாடலை தனது பாணியிலேயே ரிகிரியேட் செய்து வடிவேலு பாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த 25 நொடிகள்... 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ஸ்டீவ்-தேவா காம்போ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்குவதில் வல்லவராக இருக்கும் நடிகர் வடிவேலு ஹீரோவாகவும் களம் கண்டு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோவாகவே களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் வடிவேலு.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணனன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவே பாட இருக்கும் அந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணிபுரிகிறாராம்.

இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து திரையில் தோன்ற இருக்கிறார்கள். முன்னதாக 2001ல் வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு ஸ்டீவ் வாக் கதாப்பாத்திரத்திலும், பிரபுதேவா தேவா என்ற கேரக்டரிலும் நடித்திருந்தனர்.

இந்த இருவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையேம் பெரும் பிரபலம். இப்படி இருக்கையில் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனிடையே மனதை திருடிவிட்டாய் படத்தில் தான் பாடும் சிங் இன் தி ரெயின் பாடலை மீண்டும் வடிவேலு தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். அப்போது பிரபுதேவாவும் உடன் இருந்திருக்கிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பிரபுதேவா ‘நட்பு’ என கேப்ஷன் இட்டு பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories