சினிமா

ஆலியா-ரன்பீர் திருமணத்தில் தொடரும் சஸ்பென்ஸ்.. தகவல் கசிந்ததால் தள்ளிப்போனதா? 28 பேர் மட்டுமே பங்கேற்பு?

நடிகர் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் திட்டமிட்டபடி நடக்காமல் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியா-ரன்பீர் திருமணத்தில் தொடரும் சஸ்பென்ஸ்.. தகவல் கசிந்ததால் தள்ளிப்போனதா? 28 பேர் மட்டுமே பங்கேற்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவரும், பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், எப்போது திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இருவரின் திருமணமும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனை ஆலியா பட்டின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், திருமண தேதி முன்கூட்டியே கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மீண்டும் திருமண தள்ளிப்போயுள்ளதாகவும், 17ஆம் தேதி நடைபெறவிருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆலியா பட்டின் சகோதரர் ராகுல் பட், “ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இப்போது திருமணம் அந்த நாளிலிருந்து வேறு ஒரு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆலியா-ரன்பீர் திருமணத்தில் தொடரும் சஸ்பென்ஸ்.. தகவல் கசிந்ததால் தள்ளிப்போனதா? 28 பேர் மட்டுமே பங்கேற்பு?

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட், “ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர் திருமண தகவல் தொடர்பாக எதையும் தெரிவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். எனவே என்னால் எதையும் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

இவர்கள் இப்படிச் சொன்னாலும், செம்பூர் ஆகே ஸ்டூடியோ மற்றும் பாந்த்ராவில் உள்ள ரன்பீர் கபூர் இல்லமான கிருஷ்ண ராஜ் கபூர் பங்களாக்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த திருமணத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் குடும்பத்தினர் 28 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் திருமணம் எப்போது என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

banner

Related Stories

Related Stories