சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `மூப்பில்லா தமிழே' ; டாப்ஸியின் `சபாஷ் மித்து' - அண்மை அப்டேட்ஸ் உடன் சினி துளிகள்

 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `மூப்பில்லா தமிழே' ; டாப்ஸியின் `சபாஷ் மித்து' - அண்மை அப்டேட்ஸ் உடன் சினி துளிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. அக்‌ஷராஹாசனின் `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'!

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன். இவர் அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது இவர் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. இதில் உஷா உதூப், மரியம் ஜார்ஜ், அஞ்சனா ஆகியோரும் நடித்துள்ளனர். ராஜா ராமமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இது நேரடியாக அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான டிரெய்லரையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

2. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `மூப்பில்லா தமிழே' பாடல்!

தமிழில் மாஜா தயாரிப்பில் உருவான `என்ஜாயி எஞ்சாமி' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மாஜாவின் தயாரிப்பில் இரண்டாவதாக வெளியாக இருக்கும் பாடல் `மூப்பில்லா தமிழே தாயே'.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடியிருக்கும் இந்தப் பாடலை, கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார். அமித் கிருஷ்ணன் இந்த பாடலை இயக்கியிருக்கிறார். மார்ச் 25ம் தேதி இந்தப் பாடல் வெளியாக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

3. கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

இதன் இரண்டாம் பாகத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து முதல் பாடலாக `தூஃபான்' (Toofan) என்ற பாடலை வெளியிட்டிருக்கிறது படக்குழு. மேலும் படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

4. உபேந்திராவின் `ஹோம் மினிஸ்டர்' பட டிரெய்லர்!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உபேந்திரா. கடந்த வருடம் இவரது நடிப்பில் படம் எதுவும் வெளியாகாத நிலையில், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாக இருக்கிறது உபேந்திரா நடித்துள்ள `ஹோம் மினிஸ்டர்'. இதில் உபேந்திராவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் கன்னட திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜிப்ரான். சுஜாய் ஸ்ரீஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

5. டாப்ஸியின் `சபாஷ் மித்து' பட டீசர் வெளியானது!

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்காக உருவாகியிருக்கும் படம் `சபாஷ் மித்து'. இதில் மித்தாலி ராஜாக டாப்ஸி பன்னு நடித்துள்ளார்.

மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் மித்தாலி ராஜ் சந்தித்த சவால்களை மையமா வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது படம். தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். விரைவில் படம் வெளியாக இருக்கிறது எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories