சினிமா

"Request Accepted" : இசைஞானி - இசைப்புயல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை இசைஞானி இளையராஜா ஏற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"Request Accepted" : இசைஞானி - இசைப்புயல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை இசைஞானி இளையராஜா ஏற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா.

இந்நிலையில் துபாயில் தற்போது நடந்துவரும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. துபாய் சென்ற இளையராஜா, அங்கிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றார்.

இளையராஜாவை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றிக் காண்பித்தார். அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஏஆர் ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மான் விரும்பியபடி இசைக்கோர்வைக்கான கம்போசிங் தொடங்கும் என்றும் இளையராஜா பதிலளித்துள்ளார். இளையராஜாவின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories