சினிமா

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை... இவர் யார் தெரியுமா?

மெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் அகிலா நாராயணன்.

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை... இவர் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்க இராணுவத்தில் தமிழ் நடிகை இணைந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான இவர் பிரபல பாடகியாகவும் வலம் வந்தார். ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.

இராணுவத்தில் இணைய விரும்பிய அகிலா நாராயணன், கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்று, அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை... இவர் யார் தெரியுமா?

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அகிலா நாராயணன் கூறுகையில், “அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கிறேன். நான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளேன். என்னுடைய சேவையை மனதார உறுதியோடு செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories