சினிமா

”ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் ரயில்வே ஸ்டேஷன் செட்” - வைரலாகும் நிவின் பாலி பட BTS போட்டோஸ்!

ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் ரயில்வே ஸ்டேஷன் செட் அமைத்து ஷூட்டிங் நடத்திவரும் இயக்குநர் ராம். நிவின்பாலி, சூரி நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

”ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் ரயில்வே ஸ்டேஷன் செட்” - வைரலாகும் நிவின் பாலி பட BTS போட்டோஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமானவர் மலையாளத்தின் முன்னணி நடிகரான நிவின் பாலி. முன்னதாக நஸ்ரியாவுடன் இணைந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நேரம் படம் மூலம் நேரடி தமிழ் படத்தில் நிவின் பாலி நடித்திருந்தாலும் அதன் பிறகு பெரிதாக கோலிவுட்டில் அவரது கவனம் திரும்பவில்லை.

இந்நிலையில், ராம் இயக்கத்தில் தமிழில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய ராம் இந்த படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் படமாக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

நடிகர் சூரியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.

அங்கு பிரமாண்டமாக ரயில் நிலையம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சூரி உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories