சினிமா

அருள்நிதி நடிக்கும் க்ரைம் த்ரில்லர்... 'தேஜாவு' படத்தின் டீசரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!

அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'தேஜாவு' படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அருள்நிதி நடிக்கும் க்ரைம் த்ரில்லர்... 'தேஜாவு' படத்தின் டீசரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'தேஜாவு' படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

நடிகர் அருள்நிதி, அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

க்ரைம் த்ரில்லர் படமான இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அருள்நிதி. தேஜாவு படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அருள்நிதியுடன் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் தவிர அச்சுத் விஜய், காளி வெங்கட், சேத்தன், மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories