சினிமா

கொரோனா பரவலில் இருந்து மீளாத ’வலிமை’ : போனி கபூர் அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கொரோனா பரவலில் இருந்து மீளாத ’வலிமை’ : போனி கபூர் அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் 60வது படமாக உருவாகியுள்ள வலிமை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் எனத் தொடங்கி பாடல், டீசர், ட்ரெய்லர் என அனைத்து விதமான புரோமோஷன் வேலைகளிலும் படக்குழு இறங்கியதை அடுத்து ஒரு வழியாக ஜனவரி 13ம் தேதி ரிலீஸாக ஆயத்தமானது.

இப்படி இருக்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையாக ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவதால் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கே அனுமதி என்று இருந்தபோதும் கொரோனா பரவல் மேன்மேலும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகல் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த படங்கள் ஒவ்வொன்றாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அஜித்தின் வலிமை படமும் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வலிமை படம் ரிலீஸாவதில் இருந்து ஒத்திவைக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த விநியோகஸ்தர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து #ValimaiPostponed என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும், கொரோனா பரவல் தணிந்ததும் முதல் படமாக வலிமை படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories