சினிமா

’இந்த தடவ மிஸ்ஸே ஆகாது..’ : வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய போனி கபூர்!

ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டும் வரும் வேளையில் மீண்டும் வலிமை படம் வெளியாவது தள்ளிப்போகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

’இந்த தடவ மிஸ்ஸே ஆகாது..’ : வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய போனி கபூர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அஜித்தின் வலிமை படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 13ம் தேதி வலிமை படம் திரையரங்கில் ரிலீஸாக இருக்கிறது.

இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டும் வரும் வேளையில் மீண்டும் வலிமை படம் வெளியாவது தள்ளிப்போகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே ராஜமவுளியின் பிரமாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர்., பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற மிகப்பெரிய பஜ்ஜெட்டை கொண்ட படங்கள் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல வலிமையும் ரிலீஸாவதில் சிக்கல் எழுமா என்ற ஐயப்பாடு எழுந்தது.

அதனைப் போக்கும் வகையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதன்படி ஜனவரி 13ம் தேதி உலகெங்கும் வலிமை படம் ரிலீஸாகும் என்றும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகும் என ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories