சினிமா

உலகளவில் கால்பதிக்கும் சமந்தா; இன்ஸ்டாவில் வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் குதூகலம்!

ஹாலிவுட்டில் கால்பதிப்பதன் மூலம் உலகளவில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தியுள்ளார் சமந்தா.

உலகளவில் கால்பதிக்கும் சமந்தா; இன்ஸ்டாவில் வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் குதூகலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாக சைதன்யாவுடனான திருமண உறவு முறிவு அறிவிப்புக்கு பிறகு சற்று மனச்சோர்வில் இருந்த நடிகை சமந்தா தற்போது தன்னுடைய புதிய பிரவேசத்தை அறிவித்துள்ளார்.

சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் திரைவாழ்வில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸுக்கு படு பிசியாக மாறியிருக்கிறார் சமந்தா. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்கவிருக்கும் வெப்தொடரில் நடிக்க உள்ளதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

‘ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனமே இந்த வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறது. ‘Arrangements of Love’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொடரை பாஃப்டா (Bafta) விருது பெற்ற உலக பிரபலமான பிலிப் ஜான் இயக்கவிருக்கிறார்.

அதனால் சமந்தாவின் திரை வாழ்வு மேலும் பிரபலமாவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனிடையே விக்னேஷ் சிவனின் இயக்கத்திலான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் 2 தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories