சினிமா

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை : மோசடி கும்பலிடம் சிக்கியது எப்படி - நடந்தது என்ன?

பண மோசடி செய்ததாகத் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை : மோசடி கும்பலிடம் சிக்கியது எப்படி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ரூ. 26 லட்சம் பண மோசடி செய்ததாகத் தனியார் நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர், தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நடிகை சினேகாவிடம் கூறியுள்ளனர்.

மேலும் ரூ. 26 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும் அவரிடம் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ரூ. 25 லட்சத்தை ஆன்லைன் மூலமாகக் கொடுத்துள்ளார்.

அதேபோல் ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீட்டில் நேரில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களிடம் வட்டி தொகையைக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வட்டி தரமறுத்துள்ளனர். மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து சினேகா நம்பவைத்து பணமோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories