சினிமா

ராஜா கண்ணுவின் மனைவி பெயரில் வைப்புத் தொகை: சபாஷ் போட வைக்கும் நடிகர் சூர்யாவின் தொலைநோக்கு அறிவிப்பு!

பார்வதி அம்மாள் பெயரில் வைப்புத் தொகை டெபாசிட் செய்வது தொடர்பாக நடிகர் சூர்யா அறிவித்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.

ராஜா கண்ணுவின் மனைவி பெயரில் வைப்புத் தொகை: சபாஷ் போட வைக்கும் நடிகர் சூர்யாவின் தொலைநோக்கு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பழங்குடியினரின் அவலங்களை விவரிக்கும் வகையில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் படம் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் தலைவர்களும் ஜெய் பீம் படத்தை பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனும் சூர்யா உட்பட ஜெய் பீம் படக்குழுவை புகழ்ந்திருந்தார்.

அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள நடிகர் சூர்யா, மறைந்த ராஜா கண்ணுவின் துணைவியார் பார்வதி அம்மாவுக்கு உதவும் வகையில் அவரது பெயரில் 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வங்கியில் செலுத்தி அதிலிருந்து வரும் வட்டித் தொகையை அவரே பெற்றுக்கொள்ளும் படி வழிவகைச் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இது அவரது காலத்திற்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கும் சென்றடையும் படி செய்யலாம்.

மேலும், பழங்குடி சமூகத்தினரின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரவி சூர்யாவை மேன்மேலும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக இருளர் உள்ளிட்ட பழங்குடியினரின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சூர்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories