சினிமா

என்ன வெச்சு அன்பு செல்வன் படத்துக்கு விளம்பரம் பன்றாங்க - தயாரிப்பாளர் மீது கெளதம் மேனன் பரபரப்பு புகார்!

தொடர்ந்து சர்ச்சையில் இருக்கும் ‘அன்பு செல்வன்’ பட விவகாரம்; தயாரிப்பாளர் மீது புகார் செய்த கௌதம் மேனன்.

என்ன வெச்சு அன்பு செல்வன் படத்துக்கு விளம்பரம் பன்றாங்க - தயாரிப்பாளர் மீது கெளதம் மேனன் பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநராக சில சறுக்கல்கள் சந்தித்த கௌதம் மேனன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டெர்னேஷ்னல் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே கௌதம் மேனன் நடிப்பில் ‘அன்பு செல்வன்’ எனும் படம் உருவாகி வருவதாகவும், இயக்குநர் வினோத் என்பவர் இந்த படத்தை இயக்குவதாகவும் சமீபத்தில் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலானது. இதனையடுத்து கௌதம் மேனன் இப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை இந்த இயக்குநர் யார் என்றே எனக்கு தெரியாது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

என்ன வெச்சு அன்பு செல்வன் படத்துக்கு விளம்பரம் பன்றாங்க - தயாரிப்பாளர் மீது கெளதம் மேனன் பரபரப்பு புகார்!

இதனையடுத்து இந்த விவகாரம் கோலிவுட்டில் தீப்போல் பரவியது. கௌதமின் ட்வீட்க்கு பதிலளிப்பது போல் ‘அன்பு செல்வன்’ படத் தயாரிப்பாளர் கௌதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை என்றார். அந்த வீடியோவை பார்த்த கௌதம் மேனன் அன்பு செல்வன் ஒரே ஒருவர்தான் அது சூர்யா மட்டும் தான் என பதில் ட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து அந்த படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார். அதில், “ஜெய் கணேஷ் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, 2018-ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே ‘அன்புசெல்வன்’ படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories