சினிமா

100 கோடி கலெக்‌ஷனில் இணைந்த ’டாக்டர்’ நாயகன்; ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எட்டிய மைல்கள்; படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

100 கோடி கலெக்‌ஷனில் இணைந்த ’டாக்டர்’ நாயகன்; ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கும் படம் தான் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருந்த இந்த படம் கலகல காமெடிகள் நிறைந்த பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி கொரோனாவிற்கு பிறகு ரசிகர்களை திரையரங்கை நோக்கி படையடுக்க வைத்திருக்கிறது.

தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருந்த இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் நல்ல வசூல் பார்த்துள்ளது.

வெளியான 25 நாட்களில் 100 கோடிக்கு மேல் டாக்டர் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் க்ளப்பில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

இதனையடுத்து ட்விட்டரில் #DOCTORHits100Crs என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி கலெக்‌ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இவர் நடித்து வெளியான ‘வேலைக்காரன்’ படம் வசூல் செய்த 88 கோடிதான் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் செய்த படமாக இருந்து வந்தது.

banner

Related Stories

Related Stories