சினிமா

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்... இன்ப அதிர்ச்சியில் கலங்கிய ரசிகர்!

உயிருக்குப் போராடிவரும் ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளார் முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்... இன்ப அதிர்ச்சியில் கலங்கிய ரசிகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவரும் ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளார் முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

மறைந்த என்.டி.ராமாராவின் பேரனும், பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராவார். இவர் பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரணுடன் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ஒரு முன்னணி தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு பகுதியைச் சேர்ந்த முரளி கடந்த வாரம் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

முரளி, ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். இவரது 2 சிறுநீரகங்களும் விபத்தில் செயலிழந்து போன நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முரளி, தான் உயிருடன் இருக்கும்போதே தனது அபிமான நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை பார்த்துப் பேசவேண்டும் என தனது விருப்பத்தை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதனை அறிந்த ஜூனியர் என்.டி.ஆர் நேற்று முரளியுடன் வீடியோ கால் மூலம் பேசினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த முரளி, ஆனந்தக் கண்ணீருடன் ஜூனியர் என்.டி.ஆருடன் பேசினார். தனது ரசிகருக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறிய ஜூனியர் என்.டி.ஆர் விரைவில் உடல் நலம் குணம்டைந்து வீடு திரும்ப வாழ்த்தினார்.

இந்நிகழ்வு தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் நடிகர் ஜூனியர் என்.டி,ஆரை பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories