சினிமா

”தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்ச மனுஷன்” - ட்ரெண்டிங்கில் #HBDVadivelu ஹேஷ்டேக்!

வடிவேலுவின் 61வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் வேளையில் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து பதிவுகளை பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

”தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்ச மனுஷன்” - ட்ரெண்டிங்கில் #HBDVadivelu ஹேஷ்டேக்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நகைச்சுவை நடிகனாக மட்டும் இருந்துவிடாமல் நல்ல குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார் என்றும், தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ் என்றும் பாராட்டப்படும் அளவிற்கு தனது உடல் மொழியால் மக்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கிறார் வடிவேலு.

லைம் லைட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உச்சானிக் கொம்பில் இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கு 61வது பிறந்தநாள். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடிவேலு திரையில் தோன்ற இருப்பதால் இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில் #HBDVadivelu என்ற ஹேஷ்டேக்கில் அவர் குறித்த பதிவுகளை வெளியிட்டு நெட்டிசன்கள், மீம் கிரியேட்டர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அண்மையில் தான் நடிக்கவிருக்கும் புதிய படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது எனக்கு எண்டே கிடையாது என பேசியது மிகவும் வைரலானது. அதனை வைத்தே இணையவாசிகள் சமூக வலைதளங்களில் மீம்களை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸின் தென்னிந்திய ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வடிவேலுவின் வசனங்களை வெப் சீரிஸ் பிரபலங்கள் பேசினால் எப்படி இருக்கும் என்ற பாணியில் பதிவிட்டிருந்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வெளிவராத புகைப்படங்கள், அவர் நடித்த கதாப்பாத்திரங்களின் தொகுப்புகள் கொண்ட புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories