சினிமா

சர்வதேச விருது பெற்ற சூரரைப் போற்று.. நெகிழ்ச்சியில் சூர்யா.. வைரலாகும் Unboxing வீடியோ!

சர்வதேச விருது பெற்ற சூரரைப் போற்று.. நெகிழ்ச்சியில் சூர்யா.. வைரலாகும் Unboxing வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி என பலரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.

‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர் என பல தரப்பில் இருந்தும் சூரரைப் போற்று படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகள் குவிந்தன. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரு விருதுகளை வென்றுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மெல்பெர்ன் திரைப்பட விழாவில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கான விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதனையடுத்து விருதுக்கு கைக்கு வந்ததும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆர்வத்துடன் பிரித்து பார்க்கும் வீடியோவை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த விருதுகள் பெற்றதை அடுத்து ஒட்டுமொத்த சூரரைப் போற்று குழுவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

banner

Related Stories

Related Stories