சினிமா

மீண்டும் அஜித் படத்தை தேர்வு செய்த சூப்பர் ஸ்டார்: முதல்முறையாக ஸ்டைலிஷ் இயக்குநருடன் இணையும் ரெமோ நாயகன்

சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் கூட்டணி குறித்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மீண்டும் அஜித் படத்தை தேர்வு செய்த சூப்பர் ஸ்டார்: முதல்முறையாக ஸ்டைலிஷ் இயக்குநருடன் இணையும் ரெமோ நாயகன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கவிருக்கும் கௌதம் மேனன்!

கோலிவுட்டில் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இயக்குநர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் இயக்கத்தில் தற்போது சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் உருவாகி வருகிறது.

இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதை தொடர்ந்து கௌதம் மேனன் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இன்னும் இரண்டு படங்கள் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

மீண்டும் அஜித் படத்தை தேர்வு செய்த சூப்பர் ஸ்டார்: முதல்முறையாக ஸ்டைலிஷ் இயக்குநருடன் இணையும் ரெமோ நாயகன்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் கூட்டணி குறித்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் ஐசரி கணேசனின் மகளும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவருமான ப்ரீத்தா கணேஷ் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.

இப்படி இருக்கையில், கௌதம் மேனனின் மற்றோரு படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தை கௌதம் மேனன்தான் இயக்க இருப்பதாக டோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. மேலும் தெலுங்கின் முன்னணி இயக்குநர்களான மாருதி, வெங்கி குடுமுலாவின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories