சினிமா

மீண்டும் திரையில் தோன்றும் தந்தை & மகன்; ஒரே நாளில் வரலாறு படைத்த Spider Man - சினிமா அப்டேட்ஸ்

மீண்டும் திரையில் தோன்றும் தந்தை & மகன்; ஒரே நாளில் வரலாறு படைத்த Spider Man - சினிமா அப்டேட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாகர்ஜூனா & நாக சைதன்யா இணைந்து நடிக்கும் ‘பங்காராஜு’..!

2016ல் கல்யாண் கிருஷ்ண குரசலா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘சோகடே சின்னி நாராயணா’ படத்தின் இரண்டாவது பார்ட்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. நாகார்ஜுனா அவரின் அன்னபூர்னா ஸ்டூடியோஸ் மூலமாக இந்த படத்தை தயாரிக்கிறார், ‘பங்காராஜு’ என டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் இதில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் இந்த படத்தில் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான ஷூட்டிங் பூஜையோடு துவங்கியுள்ளது. 2022ல் படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மீண்டும் திரையில் தோன்றும் தந்தை & மகன்; ஒரே நாளில் வரலாறு படைத்த Spider Man - சினிமா அப்டேட்ஸ்

யூட்யூப்பில் வரலாறு படைத்த ‘Spider-Man: No Way Home’...

மார்வெல் தற்போது அவர்களின் பல படங்களின் ப்ரோடக்‌ஷனில் பிஸியாக இருந்து வருகின்றனர். அதில் ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ படம் ஒன்று. Jon Watts இயக்கும் இந்த படத்தில Tom Holland உடன் சேர்ந்து Zendaya, Jacob Batalon, Marisa Tomei, Jamie Foxx,jon favreau உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், இந்த படத்தில் மெயின் வில்லனாக நார்மென் ஆஸ்மன் மற்றும் டாக்டர் அக்டோபர்ஸ் கேரக்டர்கள் உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தில் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுக்கு முன்னதாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 289 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது, அதை தற்போது வெளியாகியுள்ள ‘நோ வே ஹோம்’ ட்ரைலர் ப்ரேக் செய்து உலகளவில் யூட்யூப்பில் முதலிடம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories