சினிமா

சார்பட்டா பரம்பரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : தொலைக்காட்சி உரிமம் பெற்றது கலைஞர் டிவி!

சார்பட்டா பரம்பரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : தொலைக்காட்சி உரிமம் பெற்றது கலைஞர் டிவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குத்துசண்டையை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான படம் சார்பட்ட பரம்பரை. இதில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் குத்துச்சண்டையை அடுத்து 1975ம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது தி.மு.கவுக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்தும் படமாக்கப்பட்ட விதம் தி.மு.க தொண்டர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் சார்பட்ட பரம்பரை படத்தின் தொலைக்காட்சி உரிமம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், கலைஞர் தொலைக்காட்சி படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தொலைக்காட்சியில் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories