சினிமா

இன்னும் ஒரு வாரத்தில் ’அண்ணாத்த’ அப்டேட்? முடிவுக்கு வந்தது செல்வராகவன் படம் - சினி துளிகள்!

இன்னும் ஒரு வாரத்தில் ’அண்ணாத்த’ அப்டேட்? முடிவுக்கு வந்தது செல்வராகவன் படம் - சினி துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. விரைவில் முடியவிருக்கும் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவணம் செலுத்தி வருகிறார் ரஜினி. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு சேர்ந்து நடிக்கின்றனர். சென்னை மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை முடித்த சிவா அண்ட் டீம் இப்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கை மேற்கு வங்கத்தில் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளும் சேர்ந்து நடந்து வருகின்றன, இந்த நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவித்தனர். இதனிடையே இன்னும் ஒரு வாரத்தில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடியவிருப்பதாகவும் கூடவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2. ‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது...

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இந்த படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் திருடர்களாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது, கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் பின்னணி பணிகள் தொடங்க உள்ளது.

3. ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப்பட ஷூட்டிங் துவங்கியது...

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் படப்பிடிப்பு பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் கோயம்புத்தூரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு "வீட்ல விசேஷங்க" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். சத்யராஜ் மற்றும் ஊர்வசி இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories