சினிமா

இயக்குநர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: வேறு வழியில்லாமல் லைகா நிறுவனம் செய்த மாற்று நடவடிக்கை!

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இயக்குநர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: வேறு வழியில்லாமல் லைகா நிறுவனம் செய்த மாற்று நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories