சினிமா

நடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன?

நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டுநர் உரிமத்தை மாம்பலபுரம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த  சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் 25ம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவானி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன?
Dinesh

மாமல்லபுரம் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோரை மீட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப் பிரிவுகள் 279-337-304 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன?

மேலும் யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .

banner

Related Stories

Related Stories