சினிமா

அப்போ அம்மா, இப்போ அக்கா? பிரபாஸ் பட புதிய அப்டேட்; சூர்யாவுக்கு பிறகு சிம்புவை இயக்கும் வெற்றிமாறன்?

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி படு பிசியான நடிகர்களாக இருக்கும் பிரபாஸ் மற்றும் சிம்புவின் படங்களின் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போ அம்மா, இப்போ அக்கா? பிரபாஸ் பட புதிய அப்டேட்; சூர்யாவுக்கு பிறகு சிம்புவை இயக்கும் வெற்றிமாறன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு சிம்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகிக் கொண்டு வருகிறார். கடைசியா இவருடைய நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ எதிர்ப்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனாலும், இவருக்கான படவாய்ப்புக்கு எந்த குறையும் இல்லை. இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தோட ஷூட்டிங் வேலைகள் முடிஞ்சி போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகிறது, யுவன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தோட ரிலீஸ் தேதி சீக்கிரமே அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக சிம்பு டைரக்டர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், பத்து தல, டைரக்டர் சுசிந்திரன் மற்றும் ராம் இயக்கத்தில் தலா ஒரு படம் என வரிசையாக படங்கள் கமிட் செய்து வைத்திருக்கிறார்.

அப்போ அம்மா, இப்போ அக்கா? பிரபாஸ் பட புதிய அப்டேட்; சூர்யாவுக்கு பிறகு சிம்புவை இயக்கும் வெற்றிமாறன்?

இந்த லிஸ்டில் இப்போது வெற்றிமாறனும் இணைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உலாவரத் தொடங்கியிருக்கிறது. ஆனா, வெற்றிமாறன் இப்போது சூரி நடிப்பில் விடுதலை படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடைய வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார், இதற்கிடையில் சிம்பு உடனான கூட்டணி அமையுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

இந்திய சினிமாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்துள்ளார் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்களாகட்டும், தற்போது உருவாகிவரும் படங்களாகட்டும் அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள் தான். தற்போது இவர் கைவசம் ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நில் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அப்போ அம்மா, இப்போ அக்கா? பிரபாஸ் பட புதிய அப்டேட்; சூர்யாவுக்கு பிறகு சிம்புவை இயக்கும் வெற்றிமாறன்?

மாஃபியா கதையாக உருவாகவுள்ள இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கு பிறகு துவங்கவுள்ளது. இதற்கிடையில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை படக்குழு தேர்ந்தெடுத்து வருகிறது. சலார் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பிரபாஸின் அக்கா கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகிறது, ஆனால் அவர்கள் நடிப்பது பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை.

இதற்கிடையே படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. Hombale Films தயாரிக்கும் இந்த படம் 2022 ஏப்ரல் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories