சினிமா

மே 31ல் `சர்காரு வாரி பாட்டா’ மோஷன் போஸ்டர்: ரிலீஸுக்கு முன்பே கொண்டாடும் மகேஷ் பாபு ரசிகர்கள்!

மே 31ல் `சர்காரு வாரி பாட்டா’  மோஷன் போஸ்டர்: ரிலீஸுக்கு முன்பே கொண்டாடும் மகேஷ் பாபு ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`சரிலேரு நீக்கெவ்வரு' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் `சர்காரு வாரி பாட்டா'. இந்தப் படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்குகிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்திற்கு இசை தற்போதைய டோலிவுட் சென்ஷேசன் தமன். மதி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வருட துவக்கத்தில் இதனுடைய படப்பிடிப்புகள் துவங்கியது, ஆனால் கொரோனா காரணமாக தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் மே 31ம் தேதி இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

அன்று மகேஷ் பாபுவின் அப்பாவும், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாருமான கிருஷ்ணாவின் பிறந்தநாள் என்பதால் மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்தார் மகேஷ் பாபு. அதனால் இந்த வருடம் மே 31ம் தேதியும் படம் சம்பந்தப்பட்ட எதாவது தகவல் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கூடவே #SSMBRampageOnMAY31st மற்றும் #SVPHungamaSoon ஆகிய ஹேஷ்டேக்களை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள். மேலும் தெலுங்கு மீடியாக்களும் மே 31 `சர்காரு வாரி பாட்டா' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் எனக் கூறி வருகிறது. எனவே ரசிகர்கள் எல்லோரும் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டார்கள்.

banner

Related Stories

Related Stories