சினிமா

“அது வெறும் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல” : வந்தாச்சு அசத்தலான ‘வலிமை’ பட அப்டேட் !

வலிமை வெறும் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல; எல்லா ரசிகர்களும் கொண்டாடும் படி இருக்கும் என என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

“அது வெறும் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல” : வந்தாச்சு அசத்தலான ‘வலிமை’ பட அப்டேட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் துவங்கப்பட்ட படம் `வலிமை'. 2019ல் இந்தப் படம் துவங்கப்பட்டதிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படம் துவங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் படத்தின் தலைப்பைத் தவிர வேறு எந்த தகவலையும் படக்குழு வெளியிடவே இல்லை.

இதனால் அஜித்தின் ரசிகர்கள், பல்வேறு விதமாக வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர். ட்விட்டரிலும் எந்த பிரபலம் எதை ட்வீட் செய்தாலும் அதில் சென்று வலிமை அப்டேட் கேட்பது, கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரர்களிடம் அப்டேட் கேட்பது, பிரச்சாரத்துக்கு வரும் வேட்பாளர்களிடம் அப்டேட் கேட்பது என அவர்களில் செயல்கள் வரம்பு மீறி செய்று கொண்டிருந்தது. ரசிகர்கள் இப்படி நடந்து கொள்வதை நிறுத்த சொல்லி அஜித் ஒரு அறிக்கை கூட வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் "அஜித் இந்தப் படத்திற்காக எடுத்துக் கொள்ளும் மெனக்கெடல்கள் பெரியது. மேலும் இந்தப் படத்தில் அழுத்தமாக குடும்ப சென்டிமென்ட் இருக்கும்.

மேலும் பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும். அதனால் வலிமை வெறும் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல. எல்லா ரசிகர்களும் கொண்டாடும் படி இருக்கும்" எனக் கூறியிருக்கிறார். மேலும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் இருந்து வலிமை படத்தின் அப்டேட் வரத் துவங்கும் என போனி கபூர் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories