சினிமா

“சார் நீங்களும் அட்வான்ஸ் இருந்தா குடுங்க; இப்படியும் சான்ஸ் கேக்கலாம்”-சிவகார்த்திகேயன் கலகலப்பு பேச்சு!

99 சாங்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“சார் நீங்களும் அட்வான்ஸ் இருந்தா குடுங்க; இப்படியும் சான்ஸ் கேக்கலாம்”-சிவகார்த்திகேயன் கலகலப்பு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படங்களுக்கு இசையமைப்பதைத் தாண்டி, கதை எழுதி, அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் 99 சாங்ஸ். இந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். Ehan Bhat, Edilsy, Tenzin Dalha, Lisa Ray, Manisha Koirala, Rahul Ram, Ranjit Barot எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் இந்தியில் உருவாகியிருக்கிறது.

இந்தி தவிர தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

“சார் நீங்களும் அட்வான்ஸ் இருந்தா குடுங்க; இப்படியும் சான்ஸ் கேக்கலாம்”-சிவகார்த்திகேயன் கலகலப்பு பேச்சு!

இந்நிலையில், இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தை வாழ்த்தி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் "ரஹ்மான் சார் உங்களோட பாடல்களோட தான் நான் வளந்துருக்கேன் சின்ன வயசுல இருந்து. இப்போ நீங்க குடுக்கப்போற அயலான் சாங்க்ஸோட வளரப்போறேன்ற நம்பிக்கையோட இப்போ இருக்கேன். உங்களோட ஒர்க் பண்ற ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் பெருமையானதா நினைக்கறேன்.

என்னோட அப்பா ரஹ்மான் சாரோட மிகப்பெரிய ஃபேன். இப்போ நான் ரஹ்மான் சார் மியூசிக்ல நடிக்கறது அப்பாவோட ப்ளசிங்னு தான் நினைக்கறேன். நீங்க இவ்வளோ வருஷ எக்ஸ்பீரியன்ஸுக்குப் பிறகு படத்தை தயாரிக்கறது கதை எழுதறதுன்னு புதுசா ட்ரை பண்ணிட்டே இருக்கறது எங்க எல்லாருக்கும் இன்ஸ்பையரிங்கா இருக்கு.

அப்பறம், சாரோட பேர்ல பெரிய பேனர் இருக்கு, நானும் நடிச்சிட்டிருக்கேன் சார். சோ செக் எதாவது இருந்தா அட்வான்ஸ் நீங்களும் குடுக்கலாம் சார். ரெடியா இருக்கேன். இப்டிலாம் சான்ஸ் கேக்குறியேனு நினைக்காதிங்க, எப்டி வேணாலும் ரஹ்மான் சார்ட்ட சான்ஸ் கேக்கலாம்.

இவ்வளோ பெரிய மேடை போட்டு சான்ஸ் கேக்க வாய்ப்பு கிடைச்சிருக்குன்றதுதான் விஷயம். அப்பறம் இந்த படத்தோட விஷுவல் எல்லாம் இன்டர்நேஷனல் தரத்துல இருக்கு. இந்தப் படத்த பாக்கறதுக்காக ரஹ்மான் சாரோட ஒவ்வொரு ரசிகர்கள் மாதிரி நானும் காத்துகிட்டிருக்கேன்" இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

banner

Related Stories

Related Stories