சினிமா

நடிகை காஜல் அகர்வாலுக்கு இந்த மாதம் கல்யாணம்... தொழிலதிபரை மணமுடிக்கிறார்!

காஜல் அகர்வாலை திருமணம் செய்துகொள்ளப்போகும் தொழிலதிபர் யார் தெரியுமா..?

நடிகை காஜல் அகர்வாலுக்கு இந்த மாதம் கல்யாணம்... தொழிலதிபரை மணமுடிக்கிறார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி’ படம் மூலமாகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல்கள் வந்தன. ஆனால் இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் பக்கமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நடிகை காஜல் அகர்வாலுக்கு இந்த மாதம் கல்யாணம்... தொழிலதிபரை மணமுடிக்கிறார்!

இதனையடுத்து தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கவுதமுக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது.

தொழிலதிபர் கவுதம் கிட்சுலு இ-காமர்ஸ் நிறுவனமான கட்டட வடிவமைப்பு மற்றும் இண்டீரியர் டிசைன் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர்களது திருணம் இரண்டு நாட்களுக்கு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories