சினிமா

'வலிமை' கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை!

கொரோனா காரணமாக உள்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த ‘வலிமை’ படக்குழு முடிவு.

'வலிமை' கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்தின் இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.

‘வலிமை’ படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வந்திருந்தது. மேலும் இந்தப் படத்தின் சுமார் 50 சதவிகித படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் முடிந்திருக்கும் நிலையில் ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது படக்குழு.

'வலிமை' கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை!

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. இதன் காரணமாக உள்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த ‘வலிமை’ படக்குழு முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகளைப் படமாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் வினோத்திடம், ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமிருக்கும் இந்தப் படத்தில் பெண்களைக் கவரும் சென்டிமென்ட் காட்சிகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுமாறு இயக்குநருக்கு அஜித் சில யோசனைகளைச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories