சினிமா

கார்த்திக் ராஜா இசையில்... மிஷ்கினின் அடுத்த படம் 'பிசாசு- 2' !

இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளான இன்று அவர் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் ராஜா  இசையில்... மிஷ்கினின் அடுத்த படம் 'பிசாசு- 2' !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சில நாட்களுக்கு முன்பு, மிஷ்கின் தனது அடுத்த படத்தின் விவரங்களைத் தனது பிறந்தநாளான இன்று செப்டம்பர் 20 நள்ளிரவில் அறிவிப்பதாக ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து இயக்குனர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அவர் அடுத்த படம் பிசாசு II என்று அறிவித்துள்ளார்.

பிசாசு II படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிரார். சைக்கோ புகழ் ராஜ்குமார் பிட்சுமானி இந்த படத்தில் ஒரு ஒருங்கிணைந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமே முதன் முறையாக இயக்குனர் மிஷ்கின் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கூட்டனிதான்.

இதுதொடர்பாக இயக்குனர் மிஷ்கினின் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” OUR ENCHANTER Karthik Raja’s New musical Journey” என்று குறிப்பிட்டு ஒரு புதிய பரிமானத்தை தொடங்கியிள்ளார். இந்த கூட்டனி இயக்குனர் மிஷ்கின் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.

ஒரு காலத்தில் “உல்லாசம், டும்டும்டும், காதலா காதலா” போன்ற படங்களுக்கு இசையமைத்த கார்த்திக் ராஜா தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் அவர் பெயர் இல்லை என்பது வருந்ததக்கது. இந்த நிலையில், இயக்குனர் மிஷ்கின் இதுவரை தன்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் மற்றும் இசையில் அதிக கவனம் செலுத்தி ஒரு புதிய உச்சத்தைத் தொடுவார். அந்த வகையில், கார்த்திக் ராஜா மிஷ்கின் கூட்டணி இந்த புதிய படத்தின் இசைக்குத் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories