சினிமா

ஜுவாலா கட்டாவை மணக்க இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் : பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு!

ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஷ்ணு விஷால் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை மணக்க இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் சில நாட்களாகக் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

மேலும் அந்தப் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், “பிறந்தநாள் வாழ்த்துகள் ஜுவாலா கட்டா. வாழ்வின் புதிய தொடக்கம். நம்முடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஆர்யான், நம் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காகவும் நாம் உழைப்போம். உங்கள் அனைவரின் அன்பும், பிரார்த்தனைகளும் எங்களுக்குத் தேவை.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இரவு நேரத்தில் ஒரு மோதிரத்தை ஏற்பாடு செய்து கொடுத்த தன்னுடைய நண்பர் பஸந்த் ஜெயினுக்கு விஷ்ணு நன்றி தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் லாக்டவுன் காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாடுவதாக தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வந்தனர்.

அதன் பின் விஷ்ணுவின் பிறந்தநாளுக்காகச் சென்னை கிளம்பி வந்து கட்டா அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்பின் இருவரும் ஒன்றாக ஜிம்முக்கு செல்வது, சமையல் செய்வது மற்றும் நண்பர்களுடன் செலவிடுவது உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories