சினிமா

‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவின் நாய்க்குட்டிகளுக்கு 18 லட்சம் லைக்ஸ் - இணையத்தில் வைரல்!

விஜய் தேவரகொண்டா தன் செல்ல நாய்களுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவின் நாய்க்குட்டிகளுக்கு 18 லட்சம் லைக்ஸ் - இணையத்தில் வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விஜய் தேவரகொண்டா தன் செல்ல நாய்களுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி நாயகனான விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராமை பின் தொடர்பவர்களுக்கு அவர் நாய்கள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதும், அவரது இரண்டு செல்ல நாய்களான ஸ்டார்ம் மற்றும் செஸ்டரையும் கண்டிப்பாகத் தெரியும்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு நாய்களுடனும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நாய் அவரது மடியிலும் மற்றொரு நாய் கேமராவுக்கு முன்பும் நிற்கின்றது. இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு “இந்த பசங்களுடன் இளைப்பாறுகிறேன். ஸ்டார்ம் மற்றும் செஸ்டர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை 18 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கமென்ட் செக்‌ஷனில் பலர் இதயங்களாக கமென்ட் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் அவர் தன்னுடைய நாயுடன் சட்டையில்லாமல் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.

View this post on Instagram

My Cute Beast ❤️

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda) on

மேலும் நீல கண்கள் கொண்ட ஸ்டார்ம் நாய்க்குட்டியையும் அவர் முன்பு ஒரு புகைப்படத்தின் மூலமாக தன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

View this post on Instagram

Introducing Storm Deverakonda ❤️

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda) on

தெலுங்கில் 2011-ம் ஆண்டு நுவ்வில்லா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான விஜய் தேவரகொண்டா 2016-ம் ஆண்டு வெளியான ‘பெல்லி சூப்புல்லு’ என்ற திரைப்படத்தின் மூலமாக அனைவரின் மனதையும் கவர்ந்தார். அவர் சந்தீப் ரெட்டியின் இயக்கத்தில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டியில் நடித்தது அனைத்து மொழி ரசிகர்களிடமும் அவரை கொண்டு போய் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories