சினிமா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்திய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் ‘தில் பேச்சரா’ வெளியாகியிருக்கிறது.

தில் பேச்சரா
தில் பேச்சரா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Subash Chandra Bose
Updated on

"ஜான் கிரீன்" என்ற எழுத்தாளர் எழுதி, 2012 ஆம் ஆண்டு வெளியான நாவல் தான் ‘ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’. 2014 ஆம் ஆண்டு இதே தலைப்பில் ஜோஷ் பூனி என்ற இயக்குனர் அதனை ஒரு முழு நீளத் திரைப்படமாக வெளியிட்டார். இந்தக் கதையை தழுவி இந்தியில் வெளியாகியுள்ள படம்தான் ‘தில் பேச்சரா’.

காலங்காலமாக இந்திய சினிமாவில் பல கோணங்களிலும் புற்றுநோயை மையமாக வைத்து வெளியாகியிருந்த சோகக் கதைகளை படங்களாக கண்டிருப்போம். அந்தப் பட்டியலில் ஒன்றாக இல்லாமல் ‘தில் பேச்சரா’ தனித்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

சமீபத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரின் மனதையும் சுக்குநூறாக உடைத்தது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைச் செய்தி. அவரது இறுதிப் படமாக வெளியாகி இருக்கும் ‘தில் பேச்சரா’வை சுஷாந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக விஐபி கணக்கு அல்லாத பயனாளர்களும் இலவசமாக காணும் வகையில் வெளியிட்டுள்ளது டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

மேன்னி (சுஷாந்த்) என்னும் இளைஞனும், கிஸ்ஸி (சஞ்சனா) என்ற பெண்ணும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். வழக்கமாகச் செல்லும் புற்றுநோய் முகாமில் அவர்கள் இருவரும் சந்திக்கின்றனர். மேன்னிக்கு கிஸ்ஸி மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது; அதனை கிஸ்ஸியிடம் வெளிப்படுத்திவிடுகிறார். முதலில் தடுமாறும் கிஸ்ஸி, பின் ஒரு கட்டத்தில் காதலில் விழுந்துவிடுகிறாள்! விதியால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகக்குறுகிய காலத்தில், இருவரும் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இறுதியில் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

தன் சோகங்களை மறைத்து, முகத்தில் சிரிப்புடன் உற்சாகமான ஒரு இளைஞனாகவே சுஷாந்தின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது! இப்படத்தில் அவர் சிரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், சுஷாந்த் ரசிகர்களின் கண்ணீரே பிரதிபலிக்கிறது. பல படங்களில் அவரது அசாத்திய நடிப்பை பார்த்து அனைவரும் வியந்திருப்போம். ஆனால் இப்படத்தில் அவர் தோன்றியது முதலே எதோ ஓர் இனம் புரியா சோகத்தால் நம் மனது இறுக்கநிலையை அடைந்துவிடுகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

சுஷாந்தின் இறுதிப்படத்தை திரையில் பார்ப்பதே வேதனை எனும் நிலையில், கதையும் அந்தச் சோகத்தையே பற்றிக்கொண்டு நகர்வதாய் இருக்கிறது. போதாக்குறைக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நம் கண்களின் ஓரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை, தன் இசையின் மூலம், மெல்ல கீழே தள்ளி கன்னங்களை நோக்கி வழிந்தோடச்செய்கிறார்.

இப்படத்தின் நிறைகுறைகளைத் தாண்டி, சுஷாந்த் என்னும் நடிகன், பாலிவுட்டில் தன்னை நடிகனாக நிலைநாட்டிக்கொள்ள பல தடைகளைத் தாண்டி தன் இருப்பை பதிவு செய்துள்ளான். அது நிச்சயம் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படம் - எப்படி இருக்கிறது ‘தில் பேச்சரா’?

ஒரு கலைஞனுக்கு, கைத்தட்டல்களும், பாராட்டுகளுமே பெரிய விருதாக இருக்கமுடியும். இப்பிரபஞ்சத்தின் ஏதோ ஓரு இடத்தில் சுஷாந்த் இருப்பதாகவும், இப்படத்தின் வாயிலாக சுஷாந்திற்கு கிடைக்கப்பெறும் பாராட்டுகளும் கைதட்டல்களும் அவரைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் ஆறுதல் கொள்வோம்!

banner

Related Stories

Related Stories