சினிமா

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி!

ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் முடங்கி இருக்கும் ஃபெப்சி தொழிலாளர்கள் நலனுக்காக நடிகர் விஜய் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

actor vijay
twitter actor vijay
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரொனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரத்தை கடந்துள்ளது பாதிப்பு எண்ணிக்கை. அறநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி, பிரதமர் மற்றும் தத்தம் மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி!

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரள அரசுக்கு ரூ.10 லட்சமும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளித்துள்ளார்.

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா பணிகள் ஏதும் நடத்தப்படாமல் இருப்பதால், தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களுக்காக ஃபெப்சிக்கு ரூ.25 லட்சமும் நிதியளித்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜயின் நிவாரண நிதி அறிவிப்பு செய்திய் வெளியானதை அடுத்து, ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories