சினிமா

‘நாராச்சி’ கதவு திறக்கப்படுவது எப்போது? - வெளியானது KGF-2 ரிலீஸ் தேதி!

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் KGF இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘நாராச்சி’ கதவு திறக்கப்படுவது எப்போது? - வெளியானது KGF-2 ரிலீஸ் தேதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சரித்திரக் கதையை மையமாகக் கொண்டு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த படக்குழு அது தொடர்பாக அவ்வப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த வண்ணம் இருந்தது.

‘நாராச்சி’ கதவு திறக்கப்படுவது எப்போது? - வெளியானது KGF-2 ரிலீஸ் தேதி!

இப்படத்தில், பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் தத், ரவீனா டன்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதிரா என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.

படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ‘கே.ஜி.எஃப்-2’ வெளியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள இயக்குநர் பிரசாந்த் நீல், ‘நாராச்சி கதவு’ அக்டோபர் 23ம் தேதி திறக்கப்படுகிறது என பதிவிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

banner

Related Stories

Related Stories