சினிமா

கொரோனா பீதி : விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸாவதில் சிக்கல்? - ரசிகர்கள் அதிர்ச்சி!

மார்ச் 27ம் தேதியில் இருந்து தமிழகத்தில் புதுப்பட விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது ‘மாஸ்டர்’ படத்தின் வர்த்தகத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பீதி : விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸாவதில் சிக்கல்? - ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோடை விடுமுறையை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாஸ்டர் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மாஸ்டர் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் வருமான வரித்துறை விசாரணை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வெற்றிகரமாக ஷூட்டிங் நடந்து முடிந்திருந்தாலும் தற்போது படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமாரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியது.

கொரோனா பீதி : விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸாவதில் சிக்கல்? - ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழகத்தை போல கேரள மாநிலத்திலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பீதி நிலவுவதால் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. நிலைமை கட்டுக்குள் வராவிடில் மேலும் தியேட்டர் மூடல் உத்தரவு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, TDS வரி 10 சதவிகிதத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் மார்ச் 27 முதல் புதுப்பட விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

இதனால், விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வர்த்தகம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

banner

Related Stories

Related Stories