சினிமா

மருத்துவமனையில் இருக்கும் பிரபல தொகுப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!

நானும் ரவுடிதான் பட நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், திரைப்பட நடிகராகவும் இருக்கும் ‘லோகேஷ் பாபு’ அண்மையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவச் செலவுக்காக அவரது நண்பர்கள் நிதி திரட்டி வந்தனர். இதனையறிந்த நடிகர் விஜய் சேதுபதி, லோகேஷ் பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், லோகேஷின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியையும் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் இருக்கும் பிரபல தொகுப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!

லோகேஷின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவிக்கு அவரது குடுபத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி லோகேஷை சந்தித்த புகைப்படங்களும், நலம் விசாரித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்களும், விஜய் சேதுபதிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, லோகேஷ் பாபுவின் உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் லோகேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories