சினிமா

‘தர்பார்’ பாணியில் வெளியானது ‘ரஜினி 168’ டைட்டில்: ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்!

சிவா இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

‘தர்பார்’ பாணியில் வெளியானது  ‘ரஜினி 168’ டைட்டில்: ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தர்பார் படத்தை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்திலான தனது 168வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினி. அதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றன.

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

‘தர்பார்’ பாணியில் வெளியானது  ‘ரஜினி 168’ டைட்டில்: ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்!

இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த சமயத்தில், சிவா படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென இன்று மாலை 6 மணிக்கு ரஜினி 168 படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது என சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

இதனையடுத்து, #Thalaivar168 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து அதில் ரசிகர்கள் என்ன அப்டேட் வரவிருக்கிறது என எதிர்ப்பார்த்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ரஜினி / தலைவர் 168 என இதுகாறும் அழைக்கப்பட்டு வந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டது சன்பிக்சர்ஸ்.

அதில், ரஜினி 168 படத்திற்கு “அண்ணாத்த” என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது என அறிவித்து, டைட்டில் வீடியோவும் வெளியிட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories