சினிமா

நடுவானில் ரிலீஸாகும் ‘சூரரைப் போற்று’ பாடல்... அடுத்தடுத்த அப்டேட்களால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள் !

‘சூரரைப் போற்று’ படத்தின் புதிய அறிவிப்புகள் வெளியாகும் கால அட்டவணையை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது படக்குழு.

நடுவானில் ரிலீஸாகும் ‘சூரரைப் போற்று’ பாடல்... அடுத்தடுத்த அப்டேட்களால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

’ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படமாக ‘சூரரைப் போற்று’ உருவாகி வருகிறது. இதனை ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

படத்தின் டீசர், தீம் பாடல் ஆகியவை அண்மையில் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸாகவுள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ட்ரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்தது. அதில், ‘சூரரைப் போற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடலாக அமைந்துள்ள ‘வெய்யோன் சில்லி’ பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்.,13) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கிய அப்டேட்கள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில், இன்று மூன்று அப்டேட்களும், நாளை இரண்டு அப்டேட்களும் ‘சூரரைப் போற்று’ குறித்து வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் ‘சூரரைப் போற்று’ படத்துக்கான ஏர்லைன் பார்ட்னராக உள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, வெளிவந்த இரண்டாவது அப்டேட்டில் ‘வெய்யோன் சில்லி’ பாடல் ஸ்பைஸ் ஜெட் விமானம் வானில் பறக்கும் போது வெளியிடப்படும் என்றும், அன்றைய தினமே ‘சூரரைப் போற்று’ படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகும் என்றும் அதனை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சேர்மேன் அஜய் சிங் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட அப்டேட்களால் திக்குமுக்காடியுள்ள ரசிகர்கள், நாளை வெளிவரவுள்ள அப்டேட்டுக்காக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories