சினிமா

இந்தியில் கால்பதிக்கும் எஸ்.ஆர்.பிரபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியில் கால்பதிக்கும் எஸ்.ஆர்.பிரபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘கைதி’. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அர்ஜூன் தாஸ், ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ரமணா, தீனா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பும், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும் செய்திருந்தனர்.

போதைப்பொருள் கும்பலுக்கும், போலிஸாருக்கும் இடையேயான மோதலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கார்த்தி சம்மந்தப்பட்டது எப்படி, இரு தரப்பும் இறுதியில் என்ன ஆகும், போலிஸ்காரர்களை கார்த்தி காப்பாற்றுவாரா இல்லையா என்பதே கதையின் கரு. ஒரு இரவின் 4 மணிநேரத்திற்குள் நடக்கும் இந்த த்ரில்லிங் நிறைந்த ஆக்‌ஷன் காட்சிகள் மக்களை இருக்கையின் முனைக்கு இட்டுச் சென்றன்.

படம் வெளியான வெறும் 8 நாளில் 50 கோடி அளவில் வசூலித்த இந்தப் படம் மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிலும் இந்தப் படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கார்த்தியின் ‘கைதி’ படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக இந்தி சினிமாவில் கால் பதிக்க இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

கைதி இந்தி ரீமேக்கின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சக்கைப்போடு போட்ட ‘கைதி’ படம், இந்தி சினிமா ரசிகர்களையும் ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories