சினிமா

”சென்னையில் இருந்து இதை வாங்காம வீட்டுக்கு வராத” ரன்வீரை விரட்டிய தீபிகா - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

83 படத்தின் போஸ்டரை பகிர்ந்த ரன்வீர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு தீபிகா படுகோன் கமெண்ட் செய்திருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

”சென்னையில் இருந்து இதை வாங்காம வீட்டுக்கு வராத” ரன்வீரை விரட்டிய தீபிகா - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் 83. இதில், கபில் தேவாக ரன்வீர் சிங்கும் , தமிழ் சினிமா ஹீரோவான ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் முக்கிய வீரர்களின் கதாப்பாத்திரங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது. ‘83’ படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, கபிர் கான் ஆகியோருடன் தீபிகா படுகோனும் இணைந்து தயாரித்துள்ளார்.

ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், ரன்வீர் சிங், ஜீவா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, 83 படத்தில் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளவர்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரன்வீர் சிங் வெளியிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன், “1 கிலோ மைசூர் பாக் மற்றும் 2.5 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வரவேண்டாம்” என அன்புக்கட்டளையிட்டார்.

”சென்னையில் இருந்து இதை வாங்காம வீட்டுக்கு வராத” ரன்வீரை விரட்டிய தீபிகா - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

தீபிகாவின் இந்த கமெண்ட் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இதே மாதிரி ரன்வீரும், தீபிகாவும் இன்ஸ்டாகிராமில் செல்லமாக சண்டையிடுவதும், ஒருவருக்கு ஒருவர் அன்பைக்கட்டளையிட்டு பரிமாறிக்கொள்வது வழக்கமாக கொண்டிருப்பர்.

banner

Related Stories

Related Stories