சினிமா

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் ‘சுறா’ : ரசிகர்கள் கொண்டாட்டம்: வைரலாகும் ஹேஷ்டேக்!

கேரளாவில் நடிகர் விஜய்யின் படத்தை மீண்டும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் ‘சுறா’ : ரசிகர்கள் கொண்டாட்டம்: வைரலாகும் ஹேஷ்டேக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழகத்தைப் போல விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போது அதை படு விமரிசையாக கொண்டாடித் தீர்ப்பதை கேரள ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருப்பர்.

அந்தவகையில் அண்மையில் வெளியான ‘பிகில்’ படமும் கேரளாவில் அமோக வரவேற்பை பேற்றது. தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்துக்கும் கேரள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் ‘சுறா’ : ரசிகர்கள் கொண்டாட்டம்: வைரலாகும் ஹேஷ்டேக்!

இந்நிலையில், விஜய்யின் 50வது படமாக உருவான ‘சுறா’ படம் வருகிற 26ம் தேதியோடு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகவுள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ‘சுறா’ படத்தை மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி கொல்லம் ஜி மேக்ஸ் தியேட்டரில் சிறப்பு காட்சியாக ‘சுறா’ படம் திரையிடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்புகளை கேரள விஜய் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதனையொட்டி, ட்விட்டரில் ‘சுறா’ படம் குறித்த பதிவுகளும் வைரலாகி வருகின்றன. மேலும், #Sura என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

2010ம் ஆண்டு வெளியான விஜய்யின் சுறா படத்தில் வடிவேலு, தமன்னா, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளியான சமயத்தில் இப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், 10 ஆண்டுகள் கழித்தும் கேரள ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories