சினிமா

”கைதிகள் ஷாப்பிங் போகலாம்”: சசிகலாவை குறிக்கும் ’தர்பார்’ வசனம் நீக்கம் - மிரட்டலுக்கு பணிந்தது லைகா!

தர்பார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குள்ளான வசனத்தை நீக்குவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

”கைதிகள் ஷாப்பிங் போகலாம்”: சசிகலாவை குறிக்கும் ’தர்பார்’ வசனம் நீக்கம் - மிரட்டலுக்கு பணிந்தது லைகா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும் நேற்று முன் தினம் வெளியான தர்பார் , கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”கைதிகள் ஷாப்பிங் போகலாம்”: சசிகலாவை குறிக்கும் ’தர்பார்’ வசனம் நீக்கம் - மிரட்டலுக்கு பணிந்தது லைகா!

அதில், “சவுத் இந்தியாவுல கூட ஒரு கைதி அப்பப்போ வெளிய போய்ட்டு வருவாங்கலாமே?” என்றும், “காசு இருந்தா கைதி ஷாப்பிங்கே பண்ணலாம்” என்றும் வசனம் இடம்பெற்றிருக்கும்.

இந்த வசனங்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை குறிப்பதாக இருந்ததால், அவரது தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் லைகா நிறுவனத்திடம் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அறிக்கை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம், ” “எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறையை விட்டுச் செல்வதை குறிக்கும் வசனங்கள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல.

அவ்வாறு சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்தால் அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories