சினிமா

“பொற்காலத்தின் ஆரம்பம்” : பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியீடு - படத்தில் இருப்பது யார் யார்?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பட்டியல் வெளியானது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியானது.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லஷ்மி, அஸ்வின், ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகவுள்ளது.

“பொற்காலத்தின் ஆரம்பம்” : பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியீடு - படத்தில் இருப்பது யார் யார்?

லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுமார் 800 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிக்கிறது. சரித்திரக் கதை என்பதால் தாய்லாந்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்தை அடுத்து இந்தோனேசியாவிலும் ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் படத்தில் பணியாற்றக்கூடிய முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில், பொற்காலத்தின் ஆரம்பம் எனக் குறிப்பிட்டு கம்பீரமான வாளுடன் கூடிய பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் அமைந்துள்ளது. படத்தின் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மேலும், மணிரத்னத்தின் ஆஸ்தான பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் இருக்கும் வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories