சினிமா

தற்காப்புக் கலை கதையின் இறுதி அத்தியாயம் : வெளியானது ‘இப்-மேன் 4’ ட்ரெய்லர்!

இம் மேன் 4ம் பாகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தற்காப்புக் கலை கதையின் இறுதி அத்தியாயம் : வெளியானது ‘இப்-மேன் 4’ ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Wilson Yip இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான ஹாங்காங் படம் தான் ‘இப் மேன்’. Donnie Yen நடித்திருந்த இந்தப் படம் martial arts எனும் தற்காப்புக் கலையை மையமாக வைத்து ஒரு பயோபிக்காக உருவாகிருந்தது.

தற்காப்புக் கலைகளின் மன்னனான Bruce Lee யின் மாஸ்டர் இப் மேனின் வாழ்கை வரலாறுதான் இந்தப் படம். இதுவரை 3 பாகங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்த நிலையில் இப்போது இந்தப் படத்தின் நான்காவது பாகமும் தயாராகியுள்ளது.

Wilson Yip இயக்கத்திலேயே உருவாகியுள்ள இந்த 4வது பாகம்தான் இந்த பட வரிசையின் கடைசி பாகம். இதில் ப்ரூஸ் லீ கதாபாத்திரமும் முக்கிய அங்கம் வகிப்பதால் ப்ரூஸ் லீயின் உருவ அமைப்பு போலவே இருக்கும் Danny Chann என்பவர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் Scott Adkins, Vanness Wu உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories